காதல் செய்ய ஒரு முகம் காமத்திடையில் ஒரு முகம் சோர்ந்து கிடக்க ஒரு முகம் சார்ந்து வாழ ஒரு முகம் மானங்காக்க ஒரு முகம் மாண்டபொழுதில் ஒரு முகம் தேவைக்கு சிரித்திட ஒரு முகம் தனித்து விம்ம ஒரு முகம். இன்னும் இருக்கு சொல்ல, ஆனால் எனக்கு இன்னொரு முகம் இருக்குதுன்னு, சொல்லை நிறுத்திவிட்டு நடக்கிறோம்.
அப்பனுக்கு பித்தம் தானே அத்தனையும் நீயென்றானே தகப்பனே பிறந்தானென தலையில் வைத்து கொண்டாடினானே சொப்பனத்தில் உனை நிறைத்தானே சொத்தும் பத்தும் உனதென்றானே சேமித்த பணத்தையும் சிந்திய வியர்வையில் கொடுத்தானே சிக்கல் தரும் செலவையும் அற்பம் என நினைத்தானே தகப்பன் பெத்த -சாமி என தன்னில் சாய்த்து வளர்த்தானே!
டீச்சர் அழுவாதீங்க... என் மனசு வலிக்குது 😝
ReplyDeleteஅழுகல.. அழுகல 😂
Deleteடீச்சர் 🔥🔥
ReplyDeleteThank u Ak.. 😊
Deleteகவலை படாதீங்க நட்பே
ReplyDelete