Posts

முகம் அநேகம்

Image
காதல் செய்ய ஒரு முகம் காமத்திடையில் ஒரு முகம் சோர்ந்து கிடக்க ஒரு முகம் சார்ந்து வாழ ஒரு முகம் மானங்காக்க ஒரு முகம் மாண்டபொழுதில் ஒரு முகம் தேவைக்கு சிரித்திட ஒரு முகம் தனித்து விம்ம ஒரு முகம். இன்னும் இருக்கு சொல்ல, ஆனால் எனக்கு இன்னொரு முகம் இருக்குதுன்னு, சொல்லை   நிறுத்திவிட்டு நடக்கிறோம்.

நிலவின் மேல் முளைத்த தென்னைமரம்🌚🌴

Image
கண்ணில் விழும் முடியை அள்ளி முடிச்சேன் ஒற்றை தென்னைமரம் -பூத்ததடி! கன்னகுழிய கருமையில் அள்ளி நிறைச்சேன் வட்ட நிலா -எட்டி பார்த்ததடி! சுத்தி வரும் உன் கருவிழியில் சிக்கிக்கொண்டால் போதுமடி! சொர்க்கம் கிர்க்கம் எல்லாம் சொல்லுவாங்க ஏ.. மக முன்னே சொற்ப பேச்சா இப்ப போனதடி!

தோள் பையுடன் சோகம் பூட்டி🔒

Image
அழுதுவிட்டு, அவசரமாய் முகம் கழுவி தலையை வாரி போட்டுக்கொண்டு கண்ணில் மையை நீட்டிவிட்டு உலர்ந்த உதட்டில் அடர் வண்ண சாயமிட்டு, தோள் பையுடன் சோகம் பூட்டி சாலை வழியில் நடக்கும் மகளிர் மட்டும் எத்தனை பேரோ!

வளரா கண்கள்

Image
பிறப்பிலிருந்து வடிவத்தில் வளர்ச்சியை கூட்டாத கண்கள் கவர்ச்சியை குறைக்க மறுக்கிறதே!

நம்மை பிரிக்குதே!

Image
நம்மை உறவு பிரித்தது போதாதா இந்த உலகம் பிரித்தது போதாதா அருகருகே நின்ற போதும் இடையிடையே வந்து நின்று  -இமையிரண்டும் நம்மை பிரிக்குதே!

துரோகி

Image
சங்கு சக்கர வாழ்க்கைக்குள் சவுக்கடிக்கிறான் துரோகி.

இறப்பு

Image
பதிலே இல்லாத மரணத்திடம் கேள்விக்கு என்ன இடம்! எனக்காக பிறக்காத நான் யாருக்காகவும் இறப்பதாக இல்லை.