நீ வந்தாய்..
கண்ணீராய் நான் இருந்தேன் உன் காதல் கொண்டு நீ வந்தாய்.. -பின் தன் துயரம் தான் மறந்து என் தாயாக நீ நின்றாய். பெண் பலர் சூழ்ந்து வந்து தன் அன்பை தான் உரைக்க என்னவனாய் நிலைகொண்டு தன் பெயரை வென்று வந்தாய் -பெண்ணவளின் புகழ் கருதி தன் நினைவை காத்து வந்தாய் அன்று தோள் சாய தோள் தந்து துணையானாய் என் பக்கத்தில், இன்று உயிருக்கு உயிர் தந்து உயர்ந்தோனாய் என் உள்ளத்தில்.