கை விரல் வண்ணப்பொடி நீ

வெள்ளைப்பொடி நேர்கோட்டில் உன்னிரு புருவம் தூக்கிய கோபங்கள்,
வாசலில் வளைத்து போடும் நெளிகோட்டில்
உன் வாஞ்சையான சமாதானங்கள்,
மையத்தில் வைத்த
மஞ்சள் குங்குமம்
என் மாங்கல்யத்தை ஒத்திருந்த மணத்தின் சாயல்.

விடிகாலை என் ஞாபகத்தை தொடுகையில்,
கை விரல் வண்ணப்பொடி நீ..

அந்நேரம் மட்டுமாக
என் வெள்ளைப் புடவையில்
வண்ணக் கலவைகள் சிந்துவதுபோல
எனக்கொரு எண்ணம். 



Comments

  1. என்னே வியப்பு என்னே வியப்பு எம்முள் ஆரு நம்ம அம்முவானு 💐💐💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி