தாமரை பூவு வள்ளிக்கன்னு

அரசுப்பள்ளி, மூன்றாம் வகுப்பு..
அங்கே பெயரின் அகர வரிசை எடுபடாது, உயர வரிசையில் தான் உட்கார வைப்பார்கள்.
உயர்ந்த உள்ளமும் உயரமும் கொண்ட கடைசி வரிசையிலிருந்து...ஒரே பேச்சு தான்..

என்னடி வந்ததுலயிருந்து வள்ளிக்கன்னு பேசவே இல்ல, பூவாயியும் தாமரையும் முணு முணுத்தார்கள்..
டீச்சர் போகட்டும்டி அப்புறம் கேப்போம்.. இல்ல வேணாம் இப்போவே கேக்கலாம். கூசிய குரலில் வள்ளி! அடியே வள்ளி..

என்ன! என்றாள்.
ஏன் உம்னு இருக்க வீட்ல சண்டயா..
இல்ல.. என்றாள்.

வாட் இஸ் ஹாப்பினிங் தேர்? கடைசி பெஞ்சுக்கு என்ன வேணும்,
-ஆசிரியையின் குரல்.

அச்சோ.. டீச்சர் பாக்குறாங்க..
ஷ்.. ஷ் என்றாள் பூவாயி.
மூசு மூசென அழுதாள் வள்ளி.
பாடவேளை முடியும் நேரம் டீச்சர் போயும் போகாமலும் நடக்க, அவள் பொறுக்க முடியாமல் ஓவென அழுதாள்.. பூவும் தாமரையும் பதறி போயி சொல்லு சொல்லு என்றார்கள்.

நாயி.. நாயி..
திரும்பவும் மூசு மூசு அழுகை..
நாயி நாயி.... திரும்பவும் அழுகை. எங்கள ஏன் திட்டுற இப்போ, தாமரையும் உடன் அழுதாள்.
உங்கள திட்டல.. என் நாயி இருக்குல்ல அது காலைல செத்துப்போச்சு..

அழுவாத சரி போவட்டும் நாயி தான, சொன்னாள் பூவு.

அது எனக்கு பாப்பா போல... சொல்லிக்கொண்டு கதறினாள் தாயான வள்ளிகன்னு.

Comments

  1. Nai naii😍😘😘😘antha poovaiye nee Valli nanu😘

    ReplyDelete
    Replies
    1. சரி 😂 அப்போ அந்த தாமரை யாரு 🤔🤭

      Delete

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி