யார் அந்த உருவம்..?

வழக்கம் போல அல்லாது

பரீட்சைக்காக விடிகாலை மூன்று மணிக்கே எழுந்திருந்தாள். கண்ணை கசக்கி கொண்டே அரை குறையாய் முகம் கழுவிவிட்டு, புத்தகத்தோடு சன்னலின் முன் அமர்ந்தாள்.
காற்றோட்டத்திற்கு சன்னலை திறந்துவிட்டு வரி வரியாக வாய் விட்டு படிக்க தொடங்கினாள், அரை பத்தி கடந்திருக்க மாட்டாள், விழி பிதுங்கும் படியாய் வெளியில் பார்த்தாள் ..
சன்னலின் வெளிப்புறம் வீட்டின் முற்றம் அருகில் முருங்கை மரம்..
யார் அதன் அருகில் (!?) நாற்காழியிட்டு செவப்பு சேலையில், தலைவெறி கோலமாய்.. தன் புடவை முந்தானையால் காற்று விசிறிக்கொண்டு
என்னை ஏன் பார்க்கிறாள்..
அய்யோ! பேயா பிசாசா கடவுளே..
சன்னல் கதவை அடைக்கலாமா, திடுக்கென அதுவே திறந்துவிட்டால்.. அம்மாவை எழுப்பலாமா,
அம்மா பார்க்கையில் இல்லாதுப்போனால்.. தன்னுள்ளே பேசி பேசி குழம்பி போனவள், நாளையும் இந்நேரம் வந்து பார்க்கலாம், யாரேனும் இருந்தால் ஊரையே திரட்டாலமென தீர்க்கம் கொண்டு.. மெல்லமாய் மின் விளக்கை அணைத்து, எந்த பக்கமும் திரும்பாமல் அம்மாவின் கை பக்கமாய் படுத்துக்கொண்டாள். அடுத்த நாளையிலிருந்து மூன்று நாட்கள் விடா பிடி ஜுரம். நான்காம் நாளிலிருந்து அவள் ஆறு மணிக்கு முன் எழுவதே இல்லை. அப்போ யார் அந்த உருவம்? 'என் பிரம்மை போல'
-அவளே சொன்னாள். 'ரொம்ப பயந்துட்டா போல' -நான் நினைத்து சிரித்தேன்.


Comments

  1. Awesome story.. :-) Keep adding more Jaanu!

    ReplyDelete
  2. Etho bookla or ethulayo paathu padithathai add paanirukanga avanga sonthamaa yosichi anupuna story aa

    ReplyDelete
    Replies
    1. என்னோட சொந்த அனுபவம்.. என்னால எழுதப்பட்டது.

      Delete
  3. சிவப்பு சேலை இல்ல 🙄
    வெள்ளை சூடி தான் போட்டு இருக்கு ம்மு 🙄🤔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி