தகப்பன் பெத்த சாமி
அப்பனுக்கு பித்தம் தானே அத்தனையும் நீயென்றானே தகப்பனே பிறந்தானென தலையில் வைத்து கொண்டாடினானே சொப்பனத்தில் உனை நிறைத்தானே சொத்தும் பத்தும் உனதென்றானே சேமித்த பணத்தையும் சிந்திய வியர்வையில் கொடுத்தானே சிக்கல் தரும் செலவையும் அற்பம் என நினைத்தானே தகப்பன் பெத்த -சாமி என தன்னில் சாய்த்து வளர்த்தானே!